தேவையான பொருட்கள்
பெரிய தக்காளி – ஒன்று
கம்பு மாவு - 2 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்
நெய் – அரை டீஸ்பூன்.
செய்முறை:
பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி, தக்காளியைப் போட்டு 2 - 3 நிமிடங்கள் வேகவிடவும். பிறகு தக்காளியின் தோலை உரித்து, துண்டுகளாக்கி மிக்ஸியில் அரைத்து கூழாக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கம்பு மாவுடன் தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு கரைக்கவும். பின்னர் அதைச் சூடாக்கவும்.
கலவை சூடானதும் அதில் தக்காளிக் கூழையும் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவிடவும்.
அடிக்கடி கிளறிவிட்டு கஞ்சி கெட்டியானதும் நெய் ஊற்றி, மிளகுத்தூள் சேர்த்து இறக்கிவிடலாம்.
கம்பின் நன்மைகள்:
கம்பில் இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் ஆகியவை நிறைந்துள்ளன.
கம்பி நிறைந்துள்ள வைட்டமின்கள் மற்றும் வேதிப் பொருள் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லவை.
இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் உணவினை எளிதில் செரிமான மடையச்செய்கின்றது.
தோலில் சுருக்கம் ஏற்படுவதைத் தவிர்த்து பளபளப்பைனை அளிக்க வல்லது.
கம்பில் கரோட்டின் எனப்படும் சத்து அதிகமாக இருப்பதால் இது இயற்கையாகவே முடி வளர்ச்சிக்கு உதவுகின்றது.
உடல் சூட்டை தணிக்க வல்லது.
குறிப்பு: எட்டு மாதங்களுக்கு மேலுள்ள குழந்தைகளுக்கு ஏற்றது இந்தக் கஞ்சி.
No comments:
Post a Comment