Saturday, January 16, 2021

தயிர்க் கிச்சடி



குழந்தைகளுக்கான தயிர்க் கிச்சடி செய்வது எப்படி?

தேவையானவை


அரிசி – 1 கப்
சிறு பயறு – 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் – ½ டீஸ்பூன்
கறிவேப்பிலை – 5 இலைகள்
தயிர் – ¼ கப்
நெய் – தாளிக்க சிறிதளவு

செய்முறை


அரிசியையும் சிறுபயறையும் நன்றாகக் கழுவி வேக வைத்துக்கொள்ளுங்கள். இதுதான் பிளெயின் கிச்சடி.

பிளெயின் கிச்சடி ஆறியதும் அதில் தயிரைச் சேர்த்துக் கலக்கவும்.

தவாவில் நெய் ஊற்றி, சீரகம் சேர்த்துத் தாளிக்கவும்.கடுகு வேண்டுமென்றால் சேர்த்து கொள்ளலாம்.

மேலும், அதில் கறிவேப்பிலையைப் போட்டு தாளிக்கவும். (குழந்தைக்கு வாயில் சிக்காதபடி சிறிது சிறிதாகக் கிழித்துப் போடுங்கள்)

தேவைப்பட்டால் ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்க்கலாம்.

இதே தாளித்த பாத்திரத்தில், தயிர் சேர்த்த கிச்சடியைக் கலந்து ஓரிரு நிமிடம் சூடேற்றி இறக்கிவிடவும்.

வெதுவெதுப்பான சூட்டில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.


தயிர்க் கிச்சடி பலன்கள்


தயிரில் உள்ள நல்ல பாக்டீரியா குழந்தைகளின் வயிற்றுக்கு நல்லது செய்யும்.

கால்சியம் இருப்பதால் எலும்புகள், பற்கள் வளர்ச்சிக்கு உதவும்.

உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். வெப்பக் காலத்துக்கு மிகச்சிறந்த உணவு.

செரிமானச் செயல்பாடுகள் சீராக நடக்கும்.

மாவுச்சத்து, புரதம் இரண்டும் சேர்வதால் தசை வளர்ச்சிக்கு நல்லது.

ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவு இது.

மதிய உணவாக இந்தத் தயிர் கிச்சடியைக் கொடுக்கலாம். இரவில் இதைச் செய்து கொடுப்பதைத் தவிர்க்கவும்.

குழந்தைகளுக்கு ஆறுமாத காலமாகிவிட்டால் நன்கு சத்தான,எளிமையான திட உணவு கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.ஏனென்றால் அதுவரை தாய்ப்பால் மட்டுமே அருந்திய குழந்தைகள் திட உணவினை புதிதாக ருசிக்க ஆரம்பிக்கும் காலமது.

நாம் கொடுக்கும் உணவு எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவாக இருந்தால் குழந்தைகளுக்கு அஜீரணக்கோளாறுகள் எதுவும் ஏற்படாமல் தடுக்கலாம்.

மேலும் குழந்தைகளுக்கு திட உணவினை ருசிப்பதற்கான ஆர்வத்தை அதிகப்படுத்தும்.

No comments:

Post a Comment

குழந்தைகளுக்கு சத்து மாவு கஞ்சி

1 வயது குழந்தைகளுக்கு சத்து மாவு கஞ்சி செய்வது எப்படி? தேவையான பொருட்கள் கேழ்வரகு - 1 கிலோ சம்பா கோதுமை- 1 கிலோ முழு பச்சைப்பயிறு - 1/2 கிலோ...