Saturday, January 16, 2021

பார்லி கஞ்சி



தேவையான பொருட்கள்

1/4 கப் பார்லி

3.5 கப் நீர்

2 தேக்கரண்டி ஃபார்முலா அல்லது தாய்ப்பால்

1 கப் தோலுரித்து நறுக்கப்பட்ட ஆப்பிள்


தயாரிக்கும் முறை


பார்லியை நீரில் சேர்த்து வேக வைத்து கொள்ள வேண்டும்.

இதை 10 நிமிடங்களுக்கு நன்கு சமைத்து வேக வைத்து கொள்ள வேண்டும்.

இதில் ஆப்பிள் துண்டுகளைச் சேர்த்து, குறைவான வெப்பத்தில் இரண்டும் நிமிடங்களுக்குச் சமைத்து கொள்ள வேண்டும்.

பின் சமைத்த கலவையை நன்கு மசித்து குழந்தைக்கு ஊட்டவும்.


தெரிந்து கொள்ள வேண்டியது :

குழந்தைகளுக்கு முதல் முதலில் கொடுப்பதற்கு ஏற்ற வகையில் அலர்ஜியை ஏற்படுத்தாத உணவு இது.

எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு வகை இது.

ஆரோக்கியம் தரும் உணவுகளில் பார்லி கஞ்சியும் ஒன்று, முதல் உணவாக இதனை கொடுக்கலாம். இது ஒரு அற்புதமான சத்துப்பொருளாக இருக்கிறது. இதற்கு “வாற்கோதுமை” என்று மற்றொரு பெயரும் உண்டு.

ஒர் அவுன்ஸ் அளவுள்ள பார்லி அரிசியில் 3.3 கிராம் அளவு புரோட்டீன் சத்து அடங்கியிருக்கிறது. மற்றும் 0.4 சதவீதம் கொழுப்பு சத்தும், 19.7 சதவீதம் சுண்ணாம்புச் சத்தும் அடங்கியுள்ளது.

பாஸ்பரசும் இரும்பு சத்தும் தாராளமான அளவிலேயே உள்ளன. குழந்தைகளுக்கு காப்பி – டீ போன்ற பானங்களை கொடுப்பதை விட பார்லி கஞ்சியை தொடர்ந்து கொடுக்கலாம்.


No comments:

Post a Comment

குழந்தைகளுக்கு சத்து மாவு கஞ்சி

1 வயது குழந்தைகளுக்கு சத்து மாவு கஞ்சி செய்வது எப்படி? தேவையான பொருட்கள் கேழ்வரகு - 1 கிலோ சம்பா கோதுமை- 1 கிலோ முழு பச்சைப்பயிறு - 1/2 கிலோ...