Saturday, January 16, 2021

கேரட் சாதம்



தேவையானவை :


அரிசி – 2 கப்
துவரம்பருப்பு அல்லது பாசிப்பருப்பு – 1 கப்
வெங்காயம் – 1
தக்காளி – 1
துருவிய கேரட் – 1
சீரகம் அல்லது சீரகத்தூள் – அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிது
பூண்டு – 2 தேவையெனில்
நெய் – சிறிது

செய்முறை :


அரிசி மற்றும் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து கழுவிக் கொள்ளவும்.

தக்காளி மற்றும் வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.

குக்கரில் நெய் ஊற்றி சீரகம் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். நிறம் மாறும் வரை வதக்கிய பிறகு தக்காளி, கேரட் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். இத்துடன் மஞ்சள் தூளையும் சேர்க்கவும்.

இதன்பிறகு அரிசி மற்றும் பருப்பை சேர்த்து 3 கப் தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும் வரை விடவும்.

இதனை மசித்து குழந்தைக்கு கொடுக்கலாம்.


தெரிந்து கொள்ள வேண்டியது :


பால் பிடிக்காத குழந்தைகளுக்கு கேரட் மில்க் ஷேக் செய்து கொடுக்கலாம். இதில் கால்சியம் இருப்பதால் எளிதில் ஜீரணமாகும்.

வைட்டமின் A சத்து உள்ளதால் கேரட்டை சாப்பிட்டால் கண்பார்வை குறைபாடு, கண் பொங்குதல் போன்ற பிரச்சனைகளுக்கு  நல்ல பலன் தரும். 

சருமம் வறட்சி அடைவதைத் தடுப்பதோடு, சருமத்தின் பொலிவையும் அதிகரிக்கலாம்.

No comments:

Post a Comment

குழந்தைகளுக்கு சத்து மாவு கஞ்சி

1 வயது குழந்தைகளுக்கு சத்து மாவு கஞ்சி செய்வது எப்படி? தேவையான பொருட்கள் கேழ்வரகு - 1 கிலோ சம்பா கோதுமை- 1 கிலோ முழு பச்சைப்பயிறு - 1/2 கிலோ...