Saturday, January 16, 2021

வாழைப்பழக் கூழ்




தேவையான பொருட்கள்


1 தோல் உரித்த – பழுத்த, நறுக்கப்பட்ட வாழைப்பழம்


தயாரிக்கும் முறை


தோல் உரித்த – பழுத்த, நறுக்கப்பட்ட வாழைப்பழத்தை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்; பின் அதை நன்கு மசித்து கொள்ள வேண்டும்.

மசித்த வாழைப்பழத்தை மிருது தன்மைக்காக, 25 நொடிகள் லேசாக சூடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

பின்பு சூடாக்கப்பட்ட வாழைப்பழத்தில் பால் அல்லது தண்ணீர் கலந்து கூழாக்கிக் குழந்தைக்கு ஊட்டவும்.

ஆறு மாத வயதே பூர்த்தியான குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய பழக் கூழ்
மூன்று வேளைக்கும் பொருந்தக்கூடியது

வாழைப்பழத்தில் இருக்கும் சத்துகள்

வாழைப்பழத்தில் நார்ச்சத்து, புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, சுண்ணாம்பு சத்து வைட்டமின் ஏ, பி1,2, சி, பொட்டாசியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்கள் உண்டு. வாழைப்பழத்தில் 100 க்கும் மேற்பட்ட கலோரிகள் உண்டு. அதிக ஆற்றல்தரும் இந்த பழத்தை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

வாழப்பழத்தில் பூவன், பேயன், கற்பூரவல்லி, ஏலக்கி, செவ்வாழை, மலைவாழை,மொந்தன், செவ்வாழை, ரஸ்தாலி, பச்சை வாழை, மோரீஸ், ஏலக்கி, நேந்திரம் என்று பலவகைகள் உண்டு. எல்லாமே சத்துக்கள் மிகுந்தவையே என்பதால் குழந்தைக்கு எல்லா வகையான வாழைப்பழமும் கொடுக்கலாம். பச்சை வாழைப்பழத்தை மட்டும் தவிர்க்க வேண்டும்.

எந்த வாழைப்பழமாக இருந்தாலும் வாங்கும் போது மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் இருக்கும் வாழைப்பழத்தை வாங்குவது நல்லது. இவை இயற்கை முறையில் பழுக்கப்பட்டதாக இருக்கும். இதை வாங்கி குழந்தைக்கு கொடுக்கலாம்.

No comments:

Post a Comment

குழந்தைகளுக்கு சத்து மாவு கஞ்சி

1 வயது குழந்தைகளுக்கு சத்து மாவு கஞ்சி செய்வது எப்படி? தேவையான பொருட்கள் கேழ்வரகு - 1 கிலோ சம்பா கோதுமை- 1 கிலோ முழு பச்சைப்பயிறு - 1/2 கிலோ...