அரிசிக் கூழ் - தேவையான பொருட்கள்
¼ கப் அரிசி
1 கப் தண்ணீர்
2 தேக்கரண்டி ஃபார்முலா மில்க் அல்லது தாய்ப்பால்
தயாரிக்கும் முறை
அரிசியை நன்கு சமைத்துக் கொள்ள வேண்டும்.
பின் சமைத்த அரிசியுடன் தாய்ப்பால் அல்லது ஃபார்முலா பால் சேர்த்து, மை போன்று இருக்கும் வகையில் மசித்து கூழ் தயாரிக்கவும்.
தயாரித்த கூழை குழந்தைக்கு அளிக்கவும்.
கைக்குத்தல் அரிசியின் நன்மைகள்:
கைக்குத்தல் அரிசிச் சோறு ஒரு முழு தானிய உணவு.இதில் ஏராளமான நன்மைகள் பொதிந்துள்ளன.
சத்தான வைட்டமின் பி, பாஸ்பரஸ், செலினியம், மாங்கனீசு, பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை உள்ளன.
நார்ச்சத்து மற்றும் ஃபைட்டோ நியூட்ரியண்ட்ஸ் சத்துக்கள் மிகுதியாக உள்ளது.
கைக்குத்தல் அரிசியில் உள்ள நார்சத்துக்கள் உணவினை எளிதாக செரிக்க செய்து மலசிக்கலை தடுக்கின்றது.
மெக்னீசியம் ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கு உதவுகின்றது
முதலில் சாதாரண அரிசியை பயன்படுத்துங்கள். இது குழந்தைக்கு ஒத்துக் கொண்ட பிறகு ப்ரெளன் ரைஸை பயன்படுத்துங்கள்.
சாதாரண அரிசியுடன் ஒப்பிடும் போது ப்ரெளன் ரைஸ் குழந்தைகளின் வயிற்றுக்கு ஒருவித மந்தமான சூழலை உருவாக்கும்.ப்ரெளன் ரைஸில் செலினியம், மெக்னீசியம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் உள்ளிட்ட சத்துகள் அதிகம் இருக்கிறது.
No comments:
Post a Comment