Monday, January 25, 2021

குழந்தைகளுக்கு சத்து மாவு கஞ்சி





1 வயது குழந்தைகளுக்கு சத்து மாவு கஞ்சி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

கேழ்வரகு - 1 கிலோ

சம்பா கோதுமை- 1 கிலோ

முழு பச்சைப்பயிறு - 1/2 கிலோ

கொள்ளு - 100 கிராம்

துவரம்பருப்பு - 100 கிராம்

பொட்டுக்கடலை - 100 கிராம்

பச்சரிசி - 100 கிராம்

முந்திரி - 100 கிராம்

ஏலம் - 8

விருப்பட்டால் பாதாம் சேர்க்கலாம்.

வேர்க்கடலை - 100 கிராம் (வறுத்தது)

கம்பு - 100 கிராம்

மக்காசோளம் - 100 கிராம்

சோயா - 100 கிராம்

சுண்டல் - 100 கிராம்


சத்து மாவு செய்முறை

கேழ்வரகை முளைக்கட்டி, காயவைக்கவும்

ஏலம் தவிர்த்து மற்ற அனைத்தையும் வறுத்துவைத்துக் கொள்ளவும்.

இவை அனைத்தையும் மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.


சத்து மாவு கஞ்சி தேவையான பொருட்கள்

தயாரித்த சத்து மாவு பொடி - 2 தேக்கரண்டி

தண்ணீர் - தேவையான அளவு

சர்க்கரை - தேவையான அளவு


சத்து மாவு கஞ்சி செய்முறை

இரண்டு தேக்கரண்டி மாவை தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து, அதை வடித்து கொள்ளவும்.

அந்த கரைசலுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து வேக விடவும்.

அதனுடன் பால் சேர்த்து கொதிக்க விடவும். பின் சர்க்கரை சேர்த்து நன்கு கொதித்தவுடன் இறக்கி விடவும்.

குழந்தைகளுக்கான சத்து மாவு கஞ்சி தயா‌ர், இது மிகவும் சத்து நிறைந்தது.

குழந்தைகளுக்கு பிடித்தமான வெஜிடபிள் சூப்


வெஜிடபிள் சூப் எப்படி சரி செய்வது

காய்கறி சூப் தேவையான பொருள்கள்:

கோஸ் - 50 ‌கிரா‌ம்

பீன்ஸ் - 50 ‌கிரா‌ம்

கேரட் - 50 ‌கிரா‌ம்

சோளமாவு - 3 தே‌க்கர‌ண்டி

உப்பு - தேவையான அளவு

வெண்ணெய் - ஒரு தே‌க்கர‌ண்டி

பட்டை லவுங்கம் - ‌சி‌றிதளவு பிரியாணி இலை - ‌சி‌றிதளவு

மிளகு தூள் - 2 தே‌க்கர‌ண்டி

வெங்காயம் - 1

தக்காளி - 1

கொத்தமல்லி - அல‌ங்க‌ரி‌க்க


குழந்தைகளுக்கு பிடித்தமான காய்கறி சூப் செய்முறை செய்முறை:


வெண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவுங்கம், பிரியாணி இலை, வெங்காயம் போட்டு, பிறகு தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். 


வெ‌ங்காய‌ம், த‌க்கா‌ளி ந‌ன்கு வத‌ங்‌கியது‌ம் காய்கறிகளை ஒ‌ன்ற‌ன் ‌பி‌ன் ஒ‌ன்றாக சேர்த்து லேசாக வத‌க்கவு‌ம்.


‌பி‌ன்ன‌ர் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு நன்கு வேகவை‌க்கவு‌ம்.


காய்கறிகள் வெந்ததும் மூன்று தே‌க்கர‌ண்டி சோளமாவை தண்ணீரில் கரைத்து வேகு‌ம் கா‌ய்க‌றி‌‌யி‌ல் ஊற்றி கொதிக்க விடவும். 


சூ‌ப் பத‌த்‌தி‌ற்கு வந்ததும் இறக்கி மிளகுத்தூள் சேர்த்து கொத்தமல்லி தூவி சூடாக பரிமாறவும். 


தேவைப்பட்டால் கான்பிளக்ஸை எண்ணணெய்யில் பொறித்து மேலே தூவி பரிமாறலாம். 


குழ‌ந்தைகளு‌க்கு ச‌த்தாண, சுவையான வெஜிடபிள் சூப் தயா‌ர்.


Sunday, January 17, 2021

கறுப்பு உளுந்து கிச்சடி



குழந்தைக்கு உளுந்து களி செய்வது எப்படி?


தேவை: 

அரிசி - 2 டேபிள்ஸ்பூன்  

தோல் உள்ள கறுப்பு உளுந்து - 2 டேபிள்ஸ்பூன்  

பூண்டு – 2 பல்  

கேரட் - பாதி அளவு (துருவவும்)  

மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை 

சீரகம் – கால் டீஸ்பூன்  

நெய் – ஒரு டீஸ்பூன்.


செய்முறை:


அரிசி மற்றும் கறுப்பு உளுந்தை தனித்தனியாக கழுவி, 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். 

குக்கரில் நெய்விட்டு, சீரகம் தாளிக்கவும். அதில் பூண்டு, கேரட் சேர்த்து வதக்கவும். இதனுடன் ஊறவைத்த அரிசி, உளுந்து, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும். 

பிறகு, இதில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து 2 - 3 விசில் வரும்வரை வேகவிட்டு இறக்கவும். 

பின்னர் இந்தக் களியை நெய்விட்டு கைகளாலே நன்கு மசித்து குழந்தைக்குக் கொடுக்கவும்.


குறிப்பு: எட்டு மாதங்களுக்கு மேலுள்ள குழந்தைகளுக்கு ஏற்றது இந்தக் கிச்சடி.

பட்டாணி ப்யூரி



தேவை: 

பச்சைப் பட்டாணி - அரை கப்  

தண்ணீர் - சிறிதளவு.


செய்முறை:


பச்சைப் பட்டாணியை தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். 

பின்னர் வேகவைத்த பட்டாணியை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். இதனுடன் சிறிதளவு தாய்ப்பால் அல்லது தண்ணீர் சேர்த்து கூழ் பக்குவத்தில் தயாரிக்கவும்.


குறிப்பு: பசும்பால், உப்பு, சர்க்கரை சேர்ப்பதைத் தவிர்க்கவும். ஆறு மாதங்களுக்கு மேலுள்ள குழந்தைக்கு ஏற்றது இந்த ப்யூரி.


கொண்டைக்கடலை கீரை கூழ்



தேவை: 

பாலக்கீரை (நறுக்கியது) - அரை கப்  

பூண்டு – 2 பல்  

கொண்டைக்கடலை – கால் கப்.


செய்முறை:

தண்ணீர் ஊற்றி கொண்டைக்கடலையை இரவு முழுவதும் ஊறவைக்கவும். மறுநாள், குக்கரில் கொண்டைக்கடலையை மூன்று விசில் வரும் வரை வேகவிடவும். 

ஒரு கப் கொதிக்கும் நீரில் கீரை, பூண்டு சேர்த்து 2 நிமிடங்கள் வேகவிடவும். 

பிறகு தண்ணீரை வடிகட்டி அதில் உள்ள கீரை, பூண்டை எடுத்து, அதனுடன் வேகவைத்த கொண்டைக்கடலை சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கூழாக்கவும்.

 இந்தக் கூழை மீண்டும் அடுப்பில் ஏற்றி லேசாகச் சூடு செய்தபின் குழந்தைக்குத் தரலாம்.


குறிப்பு: இந்த ப்யூரி எட்டு மாதங்களுக்கு மேலுள்ள குழந்தைகளுக்கு ஏற்றது.


தக்காளி கம்பு கஞ்சி



தேவையான பொருட்கள்

பெரிய தக்காளி – ஒன்று  

கம்பு மாவு - 2 டேபிள்ஸ்பூன்  

மிளகுத்தூள் – கால் டீஸ்பூன்  

நெய் – அரை டீஸ்பூன்.


செய்முறை:


பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி, தக்காளியைப் போட்டு 2 - 3 நிமிடங்கள் வேகவிடவும். பிறகு தக்காளியின் தோலை உரித்து, துண்டுகளாக்கி மிக்ஸியில் அரைத்து கூழாக்கவும். 

ஒரு பாத்திரத்தில் கம்பு மாவுடன் தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு கரைக்கவும். பின்னர் அதைச் சூடாக்கவும். 

கலவை சூடானதும் அதில் தக்காளிக் கூழையும் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவிடவும். 

அடிக்கடி கிளறிவிட்டு கஞ்சி கெட்டியானதும் நெய் ஊற்றி, மிளகுத்தூள் சேர்த்து இறக்கிவிடலாம்.


கம்பின் நன்மைகள்:

கம்பில் இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் ஆகியவை நிறைந்துள்ளன.

கம்பி நிறைந்துள்ள வைட்டமின்கள் மற்றும் வேதிப் பொருள் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லவை.

 இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் உணவினை எளிதில் செரிமான மடையச்செய்கின்றது.

தோலில் சுருக்கம் ஏற்படுவதைத் தவிர்த்து பளபளப்பைனை அளிக்க வல்லது.

கம்பில் கரோட்டின் எனப்படும் சத்து அதிகமாக இருப்பதால் இது இயற்கையாகவே முடி வளர்ச்சிக்கு உதவுகின்றது.

உடல் சூட்டை தணிக்க வல்லது.


குறிப்பு: எட்டு மாதங்களுக்கு மேலுள்ள குழந்தைகளுக்கு ஏற்றது இந்தக் கஞ்சி.


Saturday, January 16, 2021

ராகி கூழ்










குழந்தைக்கு ராகி கூழ் செய்வது எப்படி?

தேவையானவை

கேழ்வரகு 1/2 கப்,

பால் 2 டே.ஸ்பூன்.

செய்முறை

கேழ்வரகை முதல் நாள் இரவே தண்ணீரில் 1/2 கப் அளவில் ஊறவிட்டு, அடுத்த நாள் கழுவி வடித்து, மிக்சியில் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பின்பு அதனை வடித்தால் கேழ்வரகு பால் கிடைக்கும். 

இதிலிருந்து 2 ஸ்பூன் கேழ்வரகு பாலும், பசும்பாலும் கலந்து கூழ் காய்ச்சிக் கொடுக்கலாம். 

மீதமான கேழ்வரகு பாலை 3 நாள் வரை கூட ஃப்ரிட்ஜில் வைத்து, 

தேவைக்கு எடுத்து கூழ் செய்து கொள்ளலாம்.


தெரிந்து கொள்ள வேண்டியது :

குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது கேழ்வரகு, குழந்தைகளின் எடையை அதிகரிக்க உதவும்.


குழந்தைகளுக்கு சத்து மாவு கஞ்சி

1 வயது குழந்தைகளுக்கு சத்து மாவு கஞ்சி செய்வது எப்படி? தேவையான பொருட்கள் கேழ்வரகு - 1 கிலோ சம்பா கோதுமை- 1 கிலோ முழு பச்சைப்பயிறு - 1/2 கிலோ...